கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா

கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-16 18:18 GMT
கரூர்
31 பேருக்கு கொரோனா
கொரோனாவின் இரண்டாம் அலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி காணியாளம்பட்டியை சேர்ந்த 6 வயது சிறுமி, பாரதிதாசன் நகரை சேர்ந்த 3 வயது சிறுமி, வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 43 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் 48 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 45 வயது பெண், 11 வயது சிறுவன், 15 வயது சிறுவன், வெள்ளியணையை சேர்ந்த 64 வயது முதியவர்.
வேலாயுதம்பாளையம்
அண்ணாநகரை சேர்ந்த 61 வயது முதியவர், தளவாபாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 30 வயது பெண், 68 வயது மூதாட்டி, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண் மற்றும் 33 வயது ஆண், 57 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 25 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் 55 வயது ஆண், வாங்கலை சேர்ந்த 65 வயது முதியவர், ராயனூரை சேர்ந்த 20 வயது பெண், கடம்பங்குறிச்சியை சேர்ந்த 38 வயது ஆண், புலியூரை சேர்ந்த 39 வயது ஆண் உள்ளிட்ட 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்