அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மீது வழக்கு

முகநூலில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Update: 2021-04-17 17:50 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சின்னத்தோப்புத்தெருவை சேர்ந்தவர் அப்துல்வாகித். இவர் அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர்.. இவரது அண்ணன் அப்துல் பரீத் என்பவர் தனது முகநூலில் மே 2-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை சமர்ப்பிப்போம் என பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக முகநூலில் திருப்பத்தூர் அருகே வையகளத்தூரைச் சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் ஹரிஹரசுதன் கருத்து பதிவு செய்து உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் ஹரிஹரசுதன் மற்றும் சிலர் அப்துல் பரீத் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து இருதரப்பினரும் திருப்பத்தூர் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
இதற்கிடையே அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்துல்வாகித் கொடுத்த புகாரில் தி.மு.க.ைவ சேர்ந்த 5 பேர் மீதும், சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்