பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2021-04-17 18:00 GMT
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, ஓலப்பாளையம், குளத்துப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிரிட்டனர். இதையடுத்து பூக்கள் விளைந்தவுடன் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ-140-க்கு விற்றது தற்போது ரூ.200-க்கும், முல்லைப்பூ ரூ.250-க்கு விற்றது தற்போது ரூ.270-க்கும், அரளி ரூ.80-க்கு விற்றது ரூ.120-க்கும், ரோஜா ரூ.120-க்கு விற்றது ரூ.200-க்கும் விற்பனையானது.

மேலும் செய்திகள்