நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்

Update: 2021-04-17 19:31 GMT
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-515, ஐதராபாத்-454, விஜயவாடா-460, மைசூரு-510, மும்பை-511, பெங்களூரு-505, கொல்கத்தா-506, டெல்லி-439.
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.123-க் கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
=======

மேலும் செய்திகள்