அரியலூரில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

அரியலூரில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-17 21:31 GMT
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்தவகையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போட சென்ற 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தேர்தல் பணிக்காக வந்த மத்திய காவல் படையினருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோன்ற நிலைமை தான் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது நோயின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். போதிய அளவு தடுப்பூசி வந்தவுடன் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து தடுப்பூசி செலுத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்