திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது

திருவாரூரில் உரம் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-04-18 18:00 GMT
திருவாரூர், 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உர விலையை கடுமையாக உயர்த்தியது. இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உரம் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தம்புசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் பழனிவேல், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், நிர்வாகி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு உரம் விலையை வாபஸ் பெறக்கோரி கோஷம் எழுப்பினர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செல்லத்துரை, முன்னாள் நகர செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டு உரம் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்