இரவு நேர ஊரடங்கில் அரியலூர்-ஜெயங்கொண்டத்தில் இருந்து கடைசியாக அரசு பஸ் இயக்கப்படும் நேர விவரம்

அரியலூர்-ஜெயங்கொண்டத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்படும் நேர விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-19 20:29 GMT
அரியலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கால் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இரவு 9.30 மணி வரை இயக்கப்படும். இதில் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து கடைசி அரசு பஸ் சென்னைக்கு மாலை 3 மணிக்கும், கும்பகோணத்திற்கு இரவு 7.30 மணிக்கும், செந்துறை, திட்டக்குடி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு 8.30 மணிக்கும், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளுக்கு இரவு 9 மணிக்கும் இயக்கப்படும். இதேபோல் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து கடைசி அரசு பஸ் சென்னைக்கு மாலை 4 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 மணிக்கும், அரியலூருக்கு இரவு 8.30 மணிக்கும், அணைக்கரைக்கு இரவு 9 மணிக்கும் இயக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்