பட்டியல்-பழங்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்; சென்னையில் 26-ந் தேதி நடக்கிறது

பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்து பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

Update: 2021-04-20 09:24 GMT
பி.பி.ஓ., வங்கிகள், காப்பீடு, மின் வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் மற்றும் வேகமாக விற்பனையாக கூடிய நுகர்வோர் பொருட்கள், மனித வளம், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கும் காலி பணியிடங்கள் உள்ளன.

மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் வகையில் பணிகள் உள்ளன. 22 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் பங்கேற்க வருவோர்கள் தங்களது ‘பயோ-டேட்டா', கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மைய அதிகாரி சுஜித்குமார் சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்