அரசு பள்ளி ஆசிரியர் கொரோனாவுக்கு பலி

தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பலியானார்.

Update: 2021-04-21 17:17 GMT
தேனி: 


148 பேர் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. 

நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 148 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். 

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 39 பேர் நேற்று குணமாகினர்.

 மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. 

அவர்களில் 17 ஆயிரத்து 410 பேர் பாதிப்பில் இருந்து மீண்டனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 208 பேர் உயிரிழந்து இருந்தனர். 

அரசு பள்ளி ஆசிரியர்
இந்நிலையில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் தமிழன் (வயது 53). 

இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 



தொடர் சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் நேற்று முன்தினம் தமிழன் பரிதாபமாக இறந்தார். 



இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்தது.

----

மேலும் செய்திகள்