பலத்த மழைக்கு வாழைகள் சாய்ந்தன மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்

பந்தலூர் அருகே பலத்த மழை காரணமகா வாழைகள் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன.

Update: 2021-04-27 15:58 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே பலத்த மழை காரணமகா வாழைகள் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன. 

வாழைகள் சாய்ந்தன

பந்தலூர் அருகே உள்ள அய்யன் கொல்லி, மானூர், எருமாடு உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடனும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

 இந்த மழை காரணமாக மானூர் ஆதிவாசி காலனியில் சோமி என்பவரின் வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அப்போது அவர் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டு வந்தார். 

மேற்கூரை உடைந்த சத்தத்ைதை கேட்டு அவர் அலறியபடிவெளியே ஓடினார்.  அதுபோன்று மானூர் பகுதியில் வீரேந்திரகுமார், தங்கச்சன், பவுலோஸ், குட்டன், விஜயகுமார் ஆகியோர் சாகுபடி செய்து இருந்த ஏராளமான வாழைகள் காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்தன. 

வீடுகள் சேதம் 

இதேபோல் கள்ளிச்சால் பகுதியை சேர்ந்த குஞ்சன் மேற்கூரை மேல் பாக்குமரம் சாய்ந்ததில் அந்த வீடு பலத்த சேதம் அடைந்தது. 

அதுபோன்று அய்யன்கொல்லி மூலை கடைபகுதியில் பேபி என்பவரின் வீட்டின் மீது ஈட்டி மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த வீடும் சேதம் அடைந்தது. 

மேலும் பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டதுடன் தொலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

மேலும் செய்திகள்