கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 12 கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-27 19:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிதா? என்பது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 4 ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலா ரூ.500 முதல் ரூ.1,000 வரை என 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்