ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-04-28 17:38 GMT
மதுரை
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். அதன்படி, நேற்று காலை போலீஸ் அதிகாரி ஒருவரின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒப்பந்த பணியாளர்கள், அனுமதி சீட்டை வழங்க தாமதித்ததாக கூறி அந்த போலீஸ் அதிகாரி ஒப்பந்த பணியாளர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக ஒப்பந்த பணியாளர்கள் ஆஸ்பத்திரியின் முன்பகுதியில் திரண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்