கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் பெரிய ஜவுளிக்கடைகள் அடைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் பெரிய ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2021-04-28 20:04 GMT
தென்காசி, ஏப்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் பெரிய ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.

கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறாது. அதன்படி தினமும் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சதுர அடி கொண்ட கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.

பெரிய ஜவுளிக்கடைகள் அடைப்பு

இதைத்தொடர்ந்து தென்காசியில் நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாச சுந்தரம் மற்றும் ஊழியர்கள் தென்காசியில் உள்ள பெரிய ஜவுளி கடைகளுக்கு சென்று அரசு உத்தரவின்படி கடைகளை அடைக்க கேட்டுக்கொண்டனர். அதன்படி தென்காசியில் பெரிய ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் நல்ல வியாபாரம் இருக்கும் நேரத்தில் கடைகளை அடைப்பதால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். சிறிய கடைகளில் பொதுமக்கள் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் செய்திகள்