திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.94½ லட்சம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சமீபத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

Update: 2021-04-30 04:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சமீபத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம், தங்கநகை, வெள்ளிநகை போன்றவற்றை செலுத்தினார்கள். கடந்த 34 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்சோதி, உதவி ஆணையர் ரமணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சாமி உதவி ஆணையர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 51 ஆயிரத்து 200 செலுத்தி இருந்தனர். மேலும் 560 கிராம் தங்கம், 4 கிலோ 900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்