ஊட்டி அருகே கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி அருகே கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-04-30 19:59 GMT
ஊட்டி,

ஊட்டி அருகே டி.ஆர்.லீஸ் பகுதியில் சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டி வழியை மறித்ததை கண்டித்தும், வனவிலங்குகள் தாக்கி பசுமாடுகள் உயிரிழந்ததற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பைக்காரா வனச்சரக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் சாலையை வழிமறிப்பது பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயலாகும். அங்கு விவசாயிகளை வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. 

மேலும் வனவிலங்குகள் தாக்கியதில் கால்நடைகள் உயிரிழந்ததற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்