பொள்ளாச்சியில் கொரோனா பரவல் காரணமாக இறைச்சி, மீன் கடைகள் மூடல்

பொள்ளாச்சியில் கொரோனா பரவல் காரணமாக இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டது.

Update: 2021-05-01 17:22 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கொரோனா பரவல் காரணமாக இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டது.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பெரிய வணிக வளாகங்கள், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் அசைவ பிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இறைச்சி கடைகள் மூடல்

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதியில் புதிய திட்ட சாலை, மார்க்கெட் ரோடு, பல்லடம் ரோடு, கோவை ரோடு, வெங்கடேசா காலனி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதன் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதன்காரணமாக அசைவ பிரியர்கள் மீன், இறைச்சிகளை நேற்று முன்தினம் இரவே வாங்கி சென்றனர். சில அசைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக கோழி முட்டைகளை வாங்கி சென்றனர்.


மேலும் செய்திகள்