அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றதாக சுவரொட்டி

பல்லடம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றதாக சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-01 18:54 GMT
மங்கலம்
பல்லடம் சட்டமன்ற தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றதாக சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவரொட்டி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட உள்ளன. 
ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னரே அதாவது நேற்று மாலை மங்கலத்தை அடுத்த நடுவேலம்பாளையம் பகுதியில் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க.  வேட்பாளர் எம்.எஸ்.௭ம்.ஆனந்தன் வெற்றி பெற்றதாக சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
வெற்றி பெற்றதாக
அதில் எல்லா புகழும் வாக்காள பெரு மக்களுக்கு,  வெற்றி வெற்றி வெற்றி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட அண்ணன் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளப்பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி எனவும், கழக தொண்டன் பாஸ் என்ற பாஸ்கரன் எனவும் சுவரொட்டியில் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே இவ்வாறு சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பல்லடம் சட்டமன்ற தொகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்