பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.63 விலை நிர்ணயம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.18.63 விலை நிர்ணயம்

Update: 2021-05-01 23:44 GMT
குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். 

அதன்படி விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது:- விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு மே மாத குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 18 ரூபாய் 63 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த விலையானது கடந்த மாத ஏலத்தில் சி.டி.சி. தேயிலைத்தூளின் விற்பனை விலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இந்த குறைந்தபட்ச விலையை அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதனை தேயிலை வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்