விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ‌‌ஷநவாஸ் வெற்றி

நாகை சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ‌‌ஷநவாஸ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்க கதிவரனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

Update: 2021-05-02 18:38 GMT
நாகப்பட்டினம்:
நாகை சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ‌‌ஷநவாஸ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்க கதிவரனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
நாகை தொகுதி 
நாகை சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 95,819 பேர், பெண் வாக்காளர் 1,02,072 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 10 பேர் என மொத்தம் 1,97,901 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 6-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் வெற்றி 
இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணும் பணி 19 சுற்றுகளாக நடந்தது. முடிவில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ‌‌ஷ நவாஸ் 66,281 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,238 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.இதை தொடர்ந்து வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ‌‌ஷநவாசுக்கு வெற்றி பெற்றதற்காக சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவேல் வழங்கினார்.
வாக்கு விவரம் 
வேட்பாளர் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
பதிவான வாக்குகள்:-1,43,667
முகமது ‌‌ஷநவாஸ்(விடுதலை சிறுத்தைகள்)-66,281
தங்க கதிரவன் (அ.தி.மு.க.)- 59,043
எஸ்.அகஸ்டின் அற்புதராஜ்(நாம் தமிழர் கட்சி)-9,976
சி.மஞ்சுளா(அ.ம.மு.க.)- 3,503
சையது அனஸ்(மக்கள் நீதி மய்யம்)-2,540
மலையரசி(நாடாளும் மக்கள் கட்சி)-256
மணிகண்டன் (சுயேச்சை)-252
கனகராஜ்(சுயேச்சை)-209
எஸ்.பி.பாஸ்கரன் (சுயேச்சை)-184
துரைசெல்வகுமார் (சுயேச்சை)-113
சி.சிங்காரவடிவேலன்(சிவசேனா கட்சி)-105
பிரேம்(சுயேச்சை)-105
சுயேச்சை(ஜெ.வி.துரை)-98
நோட்டா-895
செல்லாத வாக்குகள்-107

மேலும் செய்திகள்