மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் நாகை மாலி வெற்றி

கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளரை விட 16,985 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

Update: 2021-05-02 18:50 GMT
நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளரை விட 16,985 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் வெற்றி
நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டசபை தொகுதி தனி தொகுதி ஆகும். இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 87,310 பேரும், பெண் வாக்காளர்கள் 91,373 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 1,78,686 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 1,43,373 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும்  மையத்தில் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 18 சுற்றுகள் நடந்தது. முடிவில் மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16,985 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
நாகை மாலிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் ஜெயசித்ரகலா வழங்கினார். 
வாக்கு விவரம்
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
நாகை மாலி(மா.கம்யூ) - 67,988
வடிவேல் ராவணன் (பா.ம.க.) - 51,003
எஸ்.பொன்இளவழகி(நாம் தமிழர்) - 15,173
ஜி.சித்து(மக்கள் நீதி மய்யம்) - 2,906
எம்.நீதிமோகன்(அ.ம.மு.க.) - 2,503
தமிழரசன்(பகுஜன் சமாஜ்) - 641
எஸ்.முத்தழகன்(புதிய தமிழகம்) - 614
ஜி.கலைச்செல்வன்(சுயே) - 615
வேதமுகுந்தன்(சுயே) - 483
ஜி.மருதையன்(சுயே) - 173
நோட்டா - 896
செல்லாதவை - 378.

மேலும் செய்திகள்