மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டது

வாக்கு எண்ணிக்கை நடந்த போதிலும் விருதுநகர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டது.

Update: 2021-05-02 20:01 GMT
விருதுநகர், 
தமிழகத்தில் கொரோனாபரவல் அதிகரித்து வருவதை ஒட்டி தமிழக அரசு வாரநாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்தது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடப்பு ஆண்டின் முதல் முறையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை தினமான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட மக்கள் தாங்களாகவே எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி முழுஊரடங்கை கடைப்பிடித்தனர். காலையில் இருந்தே மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களும், பிரதான சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது. டீக்கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க் திறந்து இருந்தாலும் எந்த வாகனமும் அங்கு வராத நிலை நீடித்தது. பரபரப்பான தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்த போதிலும் ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் முழு அமைதி நிலவியது. 

மேலும் செய்திகள்