உடுமலை சட்டமன்ற தொகுதியில் உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி

உடுமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றிபெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார்.

Update: 2021-05-02 20:40 GMT
திருப்பூர்
உடுமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றிபெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார். 
உடுமலை சட்டமன்ற தொகுதி
உடுமலை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,69,728. 
பதிவான வாக்குகள் 1,94,657.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.  அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 96 ஆயிரத்து 893 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு 74 ஆயிரத்து 998 ஓட்டுகள் பெற்றார். இதனால் 21 ஆயிரத்து 895  ஓட்டுகள் வித்தியாசத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 
மற்ற வேட்பாளர்கள்  பெற்ற ஓட்டுகள் விவரம்:-
1)ஆர்.பழனிசாமி (அ.ம.மு.க.)-1043
2) வி.ஸ்ரீநிதி (மக்கள் நீதி மய்யம்)-8,163 
3) ஏ.பாபு ராஜேந்திரபிரசாத் (நாம் தமிழர் ) -8,592 
4) கே.குமார் (சுயே)- 459
5) டி.கிருஷ்ணன் (சுயே)-683
6) கே.நாச்சம்மாள் (சுயே)-177
7) எஸ்.அசோக்குமார் (சுயே)-70
8) பி.ஆறுமுகம் (சுயே)-184
9) டி.உமர்அலி (சுயே)-224
10) சி.எல்சி (சுயே)-126
11) எஸ்.கார்த்திகேயன் (சுயே)-181
12)  டி.திவ்யா (சுயே)-787
13) கே.ரஜினி (சுயே)-300
நோட்டா -1,478
செல்லாதவை -299
தபால் ஓட்டுகள்-2,593

மேலும் செய்திகள்