நெல்லை தொகுதியை பா.ஜனதா கைப்பற்றியது

நெல்லை தொகுதியை பா.ஜனதா கைப்பற்றியது.

Update: 2021-05-02 22:19 GMT
நெல்லை, மே:
நெல்லை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 92 ஆயிரத்து 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

நெல்லை தொகுதி

நெல்லை சட்டசபை தொகுதிக்கு கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகின. இது 66.90 சதவீதம் ஆகும். 
இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ்கண்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

14 வேட்பாளர்கள் 

ேதர்தலில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. 
ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் அவர் 92 ஆயிரத்து 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 69 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்தன.
இந்த தொகுதியில் கடந்த முறை லட்சுமணன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். தற்போது பா.ஜனதா கைப்பற்றி உள்ளது. 

வாக்குகள் விவரம்

நெல்லை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:- 
1. நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா) - 92,282
2. லட்சுமணன் (தி.மு.க.) - 69,175
3. மகேஷ் கண்ணன் (அ.ம.மு.க.) - 8,911
4. சத்யா (நாம் தமிழர் கட்சி) - 19,162
5. கலாநிதி (பகுஜன் சமாஜ் கட்சி)- 654
6. சுந்தர்ராஜ் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு)- 415
7. இசக்கிமுத்து (சுயே.) - 437
8. சங்கரசுப்பிரமணியன் (சுயே.) - 582
9. சங்கரநாராயணன் (சுயே.) - 264
10. சிவக்குமார் (சுயே.) - 1412
11. ரா.முருகன் (சுேய.) - 199
12. வே.முருகன் (சுயே.) - 342
13. ராகவன் (சுயே.) - 319
14. ஸ்ரீதர்ராஜன் (சுயே.) - 1,342
15. நோட்டா- 2091

மேலும் செய்திகள்