மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி; ஈரோடு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ. ஆனார் டாக்டர் சரஸ்வதி

மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று, ஈரோடு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ.வாக டாக்டர் சரஸ்வதி ஆனார்.

Update: 2021-05-03 00:36 GMT
ஈரோடு
மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று, ஈரோடு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ.வாக டாக்டர் சரஸ்வதி ஆனார்.
281 வாக்குகள் வித்தியாசம்
மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதி போட்டியிட்டார். அவர் மொத்தம் பதிவான 1 லட்சத்து 82 ஆயிரத்து 446 வாக்குகளில் 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்றார். இதில் 472 தபால் ஓட்டுகளாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1,435 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 77 ஆயிரத்து 844 ஓட்டுகள் பெற்றார். எனவே பா.ஜனதா வேட்பாளர் 281 ஓட்டுகள் அதிகம் பெற்றார். எனவே வெறும் 281 வாக்குகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மொடக்குறிச்சி தொகுதியின் தொடக்கத்தில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. ஆனால் திடீர் என்று மாற்றம் வந்தது. அதில் இருந்து டாக்டர் சரஸ்வதி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தின் ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையை அவர் பெற்று உள்ளார்.
வாக்குகள் விவரம்
மொடக்குறிச்சி தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
கே.பிரகாஷ் (நாம் தமிழர் கட்சி) - 12,944
ராஜேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்) - 4,574
டி.தங்கராஜ் (அ.ம.மு.க.) - 1,547
ஆர்.பூபதி (பகுஜன் சமாஜ் கட்சி) - 1,143
ஆர்.மாணிக்கம் (இந்திய கணசங்கம் கட்சி) - 327
மகேஸ்வரன் (மை இண்டியா பார்ட்டி) - 295
எம்.ரமேஷ் (நமது கெங்கு முன்னேற்ற கழகம்) - 235
பி.மணி (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி) - 119
சாமி கந்தசாமி (சுயே) -882
விஜயகுமார் (சுயே) - 569
மயில்சாமி (சுயே) - 335
கோவணம் தங்கவேல் (சுயே) - 301
எல்.பாரதி (சுயே) - 275
நோட்டா - 2,342

மேலும் செய்திகள்