பவானி தொகுதியில் மீண்டும் அமைச்சர் கே.சி.கருப்பணன் வெற்றி பெற்றார்

பவானி தொகுதியில் மீண்டும் கே.சி.கருப்பணன் வெற்றி பெற்றார்

Update: 2021-05-03 00:39 GMT
ஈரோடு
பவானி தொகுதியில் மீண்டும் கே.சி.கருப்பணன் வெற்றி பெற்றார்
3-வது முறை வெற்றி
பவானி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டியிட்டார். பவானி தொகுதியில் பதிவான 2 லட்சத்து 1,433 வாக்குகளில் 1 லட்சத்து 915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்குகள் 630 ஆகும்.
இந்த வெற்றியின் மூலம் பவானி தொகுதியில் 3-வது முறையாக கே.சி.கருப்பணன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கே.பி.துரைராஜ் போட்டியிட்டார். அவர் 1,313 தபால் ஓட்டுகள் சேர்த்து 78 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார். எனவே 22 ஆயிரத்து 523 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சி.கருப்பணன் வெற்றிக்கனியை பறித்தார்.
வாக்குகள் விவரம்
பவானி தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
எம்.சத்யா (நாம் தமிழர் கட்சி) - 10,471
சதானந்தம் (மக்கள் நீதி மய்யம்) - 4,221
ராதாகிருஷ்ணன் (அ.ம.மு.க.) - 956
அம்மாசை (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) - 943
எம்.கோபால் (பகுஜன் சமாஜ் கட்சி) - 870
ஜனார்த்தனம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி) - 322
சதீஷ்குமார் (சுயே) - 1,212
வி.எம்.பெருமாள் (சுயே) - 419
ஜி.ஸ்டேன்லி (சுயே) - 245
கார்த்திகேயன் (சுயே) - 122
அப்துல் காதர் (சுயே) - 107
அப்பிச்சி (சுயே) - 99
நோட்டா - 2,070

மேலும் செய்திகள்