தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-03 15:39 GMT

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 257 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 169 பேர் நேற்று ஒரே நாளில் குணமாகினர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 963 பேர் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,022 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.


மேலும் செய்திகள்