நோட்டாவுக்கு 18,637 ஓட்டுகள்

நோட்டாவுக்கு 18637 ஓட்டுகள்

Update: 2021-05-03 17:15 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நோட்டாவுக்கு மொத்தம் 18,637 ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது, கடந்த தேர்தலைவிட பாதி ஆகும்.

நோட்டாவுக்கு ஓட்டுகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்றுமுன்தினம் எண் ணப்பட்டன. இதில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் ஒட்டுப்போட வசதியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா பட்டன் உள்ளது. 

அதில் எந்த கட்சியையும் விரும்பாதவர்கள் வாக்களித்து வந்தனர். இதனால் சுயேட்சைகள் மட்டுமின்றி சில கட்சி வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் விழுவதும் அரங்கேறி வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு தொகுதியிலும் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் விவரம் வருமாறு 

18,637 ஓட்டுகள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18,637 ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்தன.

கோவை வடக்கு-1701, கவுண்டம்பாளையம்-2892, சிங்காநல்லூர்-1433, மேட்டுப்பாளையம்-2733, சூலூர் -2160, தொண்டாமுத்தூர்-1635, கோவை தெற்கு -887, வால்பாறை -1409, கிணத்துக்கடவு-2280, பொள்ளாச்சி -1527. 
இதில், குறைந்தபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 887 ஓட்டுகளும், அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 2892 ஓட்டுகளும் நோட்டாவுக்கு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் 35024 ஓட்டு

ஆனால் கடந்த தேர்தலில் நோட்டாவுக்கு மொத்தம் 35024 பேர் ஓட்டு போட்டனர். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் விவரம் வருமாறு

கோவை வடக்கு-4574, கவுண்டம்பாளையம்- 5274, சிங்காநல்லூர்-3732, மேட்டுப்பாளையம்-2892, சூலூர்-3688, தொண்டாமுத்தூர்-3221, கோவை தெற்கு -3331, வால்பாறை -2206, கிணத்துக்கடவு - 3864 பொள்ளாச்சி-2242.

வீணடிக்க விரும்ப வில்லை

கடந்த தேர்தலில் 35024 பேர் நோட்டாவுக்கு ஓட்டு போட்ட நிலையில், இந்த தேர்தலில் நோட்டாவுக்கு மொத்தம் 16387 பேர் தான் ஓட்டு போட்டுள்ளனர்.

 இதன் மூலம் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது நோட்டாவுக்கு ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளது. 
இதன் மூலம் தங்களின் ஓட்டுகள் யாருக்கும் வீணடிக்க விரும்பாமல் ஏதோ ஒரு கட்சி வேட்பாளருக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்