சிற்பக்கூடத்தில் புகுந்த விரியன் பாம்பு

பழனியில் சிற்பக்கூடத்தில் விரியன் பாம்பு ஒன்று புகுந்தது.

Update: 2021-05-03 17:34 GMT
பழனி: 

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலை பகுதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சிற்ப கலைக்கூடம் உள்ளது. 

நேற்று அங்கு ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

 அப்போது திடீரென்று விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பாம்பை தேடினர். 

அதற்குள் அது அங்குள்ள கற்குவியலில் பதுங்கி கொண்டது. இதுகுறித்து அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

 அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கற்குவியலில் பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீள விரியன் பாம்பை பிடித்தனர்.

 பின்னர் அதை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 

மேலும் செய்திகள்