சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தடுத்த சுயேச்சை

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை சுயேச்சை வேட்பாளர் பறித்துள்ளார்.

Update: 2021-05-03 18:23 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். கடந்த முறை இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகரனுக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை. மாறாக அ.தி.மு.க. சார்பில் சந்திரன் களம் இறக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி போட்டியிட்டார். சந்திரசேகரன் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் பதிவான 1,99,235 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் பொன்னுசாமி 90,681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் 80,188 வாக்குகள் பெற்றார். எனவே தி.மு.க. வேட்பாளர் பொன்னுசாமி 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட சந்திரசேகரன்  11 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றார். இது தி.மு.க. வேட்பாளர், அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக பெற்ற வாக்குகளை காட்டிலும் அதிகம் ஆகும். இதனால் சந்திரசேகரன் பெற்ற வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை தடுத்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்