திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்

திருப்பத்தூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் நள்ளிரவு வரை எண்ணப்பட்டன. தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றதால் தி,.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 4-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

Update: 2021-05-03 18:28 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் நள்ளிரவு வரை எண்ணப்பட்டன. தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றதால் தி,.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 4-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்ற தொகுதியாகும் காரணம் இந்த தொகுதியில் கவிஞர் கண்ணதாசன் முன்னாள் அமைச்சர்கள் மாதவன், ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலர் இத்தொகுதியில் போட்டியிட்டு உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 42 ஆயிரத்து 4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தார்.

4-வது முறையாக...

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் கே.ஆர்.பெரியகருப்பன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 682 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அ.தி.மு.க. வேட்பாளரை காட்டிலும் 37 ஆயிரத்து 374 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.
 அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் 66 ஆயிரத்து 308 ஓட்டுகள் பெற்று இருந்தார். அ.ம.மு.க. வேட்பாளர் கே.கே.உமாதேவன் 7 ஆயிரத்து 448 ஓட்டுகள் பெற்று இருந்தார். இந்த தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் கே.ஆர். பெரியகருப்பன் 4-வது முறையாக எம்.எல்..ஏ,.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை வழங்கினார். முன்னதாக 15-க்கும் மேற்பட்ட ஓட்டு எந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டதால் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு விவரம்

31 சுற்றுகளில் இறுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
1. கே.ஆர்.பெரியகருப்பன்(தி.மு.க.)-1,03,682
2. மருது அழகுராஜ்(அ.தி.மு.க.)-66,308
3. அமலன் சபரிமுத்து(இந்திய ஜனநாயக கட்சி)-862
4. கே.கே.உமாதேவன்(அ.ம.மு.க.)-7,448
5. கோட்டை குமார் (நாம் தமிழர் கட்சி)-14,571
6. சரஸ்வதி(புதிய தமிழகம் கட்சி)-241
7. சே.முருகன்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி)-96
8. வீரபாண்டியன்(மை இந்தியா பார்ட்டி)-144
9. அப்துல்கிஷோர்பாபு(சுயே)-85
10. ஆனந்தன்(சுயே)-62
11. கண்ணன்(சுயே)-68
12. கார்த்திகா(சுயே)-80
13. ெசல்வராஜ்(சுயே)-221
14. பரமசிவம்(சுயே)-13,202
15. பழனியப்பன்(சுயே)-333
16. பார்த்தசாரதி(சுயே)-465
17. பெரியசாமி(சுயே)-605
18. மல்லிகா(சுயே)-444
19. முகமது ரபீக்(சுயே)-122
20. முத்துலட்சுமி(சுயே)-65
21. ராமு முருகேசன்(சுயே)-69
22. ராஜேஷ்(சுயே)-352
23. ராஜேஸ்வரி(சுயே)-152
24. ரேணுகா(சுயே)-56
25. வீராயி(சுயே)-65
26. ஜெயச்சந்திரன்(சுயே)-115
27.நோட்டா-853.

மேலும் செய்திகள்