மேலும் 271 பேருக்குகொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-05-03 18:59 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 20,857 ஆக உயர்ந்துள்ளது. 
18,292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,690 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது. 
பாதிப்பு 
நேற்று விருதுநகரில் போலீஸ் குடியிருப்பு, அரசு ஆஸ்பத்திரி, பாவாலி, பெத்தனாட்சி நகர், லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, புறவழிச்சாலை, முத்து தெரு, எப்.எப். ரோடு, பேராலி ரோடு, முத்தால் நகர், புல்லலக்கோட்டை, கே.வி.வி.ரோடு, சூலக்கரை, போஸ்ட் ஆபிஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் சிவகாசி, சித்துராஜபுரம், செங்கமலப்பட்டி, திருத்தங்கல், ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி, ராமசாமிபுரம், பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,  காரியாபட்டி, நரிக்குடி, உலக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
முரண்பாடு 
நேற்றும் நோய் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தொடர்பான மாவட்ட, மாநில பட்டியல்களிடையே முரண்பாடு உள்ளது. 
இந்த முரண்பாடு ஏன்? என்று தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான காரணங்களை அறிந்து சீரான முறையில் முரண்பாடில்லாமல் பாதிப்படைந்தோர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்