வணிக நிறுவனத்திற்கு சீல் வைப்பு

கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதை கண்டறிந்து கடையை பூட்டி சீல் வைப்பு

Update: 2021-05-03 19:22 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதவிர மாவட்ட கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் சப்-கலெக்டர் சுகபுத்ரா, நகர சபை ஆணையாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராமநாதபுரம் நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
அப்போது சாலைத்தெரு பகுதியில் ஒரு வணிக நிறுவனம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதை கண்டறிந்து கடையை பூட்டி சீல ்வைத்தனர். மேலும் அந்த பகுதியில் சமூக இடைவெளியின்றி செயல்பட்ட பல கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்