வேளாண் மாணவிகள் ஊரக பங்கேற்பு நிகழ்ச்சி

எஸ்.புதூரில் வேளாண் மாணவிகள் ஊரக பங்கேற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-05-03 19:46 GMT
எஸ்.புதூர்,

வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் வேளாண் பணி அனுபவம் என்ற முறையில் கிராமங்களில் தங்கி கற்று வருகின்றனர். அதன் பேரில் எஸ்.புதூர் கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டிற்காக வேளாண் மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் தகவல்களை சேகரித்து சமூக வரைபடம், வளங்கள் வரைபடம், கால அட்டவணை, தினசரி வேலை, இயக்க வரைபடம், ஆகியவற்றை வரைந்து காண்பித்தனர்.
இதன் மூலமாக  கிராம வளர்ச்சியை ஒரே இடத்தில் வரைபடம் மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சந்தியா, அபிலாராணி, மீனாட்சி, சாந்தினி, பிரதீபா, சவிதா, நித்யா உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்