கோவை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது

கோவை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.

Update: 2021-05-03 21:12 GMT
கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை  குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பொதுஇடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதன்படி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

 மேலும் சட்டமன்ற தேர்தல் காரணமாகவும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் போட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சட்ட மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. 

இதனால் திங்கட்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கோவை கலெக்டர் அலுவலகம் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அரசின் அடுத்த அறிவிப்பு வந்த பின்னர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்