வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு கட்டுப்பாட்டு அறை

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-04 16:31 GMT
திண்டுக்கல்: 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

இதனால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், உதவி செய்வதற்கும் மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. 

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். 


இவர்களுக்கு உதவும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிடத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.


எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உதவி ஆணையர் ராமராஜ் (செல்போன் எண்- 94438 25445),

 திண்டுக்கல் உதவி ஆய்வாளர் அருண்பாலாஜி (செல்போன் எண்- 99944 48156), திண்டுக்கல் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன் (செல்போன் எண்- 97913 55205),

 கொடைக்கானல் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன் (செல்போன் எண்- 99942 12351) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

இதுதொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் ராமராஜ் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்