வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு பிரதிபலிக்கும் லத்தி

திருப்பூரில் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு பிரதிபலிக்கும் லத்திகளை உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் வழங்கினார்.

Update: 2021-05-04 17:34 GMT
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு பிரதிபலிக்கும் லத்திகளை உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் வழங்கினார்.
வாகன சோதனை
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் இரவு நேர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இரவு நேர பணியின் போது அவர்கள் கையடக்க பேட்டன் லைட்டை பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தும்போது அடிக்கடி பழுது ஏற்படுவது, உடைந்து போவது, சார்ஜ் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சுந்தர வடிவேல் அறிவுறுத்தலின்படி, மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆலோசனையின்படி மாநகரில் பணியாற்றும் போலீசாருக்கு கையடக்க பேட்டன் லைட்டுக்கு பதிலாக பிரதிபலிக்கும் லத்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பிரதிபலிக்கும் லத்தி
இதையடுத்து முதற்கட்டமாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூலுவப்பட்டி சோதனை சாவடி, ஸ்ரீநகர் புறக்காவல் நிலையம், 4 சக்கர ரோந்து வாகனம், எஸ்.ஏ.பி. தியேட்டர் பிக்கெட்டிங், பிச்சம்பாளையம் பிக்கெட்டிங் மற்றும் பகுதி 1,2,3-ல் இரவு நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு இந்த பிரதிபலிக்கும் லத்திகள் வழங்கப்பட்டது. 
இதன்படி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் 20 போலீசாருக்கு லத்திகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்