நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 9 பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம்

நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 9 பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

Update: 2021-05-04 18:53 GMT
நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிப்பதற்காக, இருசக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களான நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன், பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பெருமாள்புரம், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 9 பெண் போலீசாருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி, 9 பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனங்களை வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்