கோவை மாவட்டத்தில் மேலும் 1,509 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 1,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-04 21:48 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இருப்பினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 1,509 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 646 ஆக உயர்ந்தது.

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகச்சை பெற்ற 1,105 பேர் நேற்று ஒரே நாளில் குணமாகி வீடு திரும்பினர். இதன்படி 74 ஆயிரத்து 877 பேர் குணமடைந்து உள்ளனர். 

தற்போது 8,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 62 வயது மூதாட்டி, 55 வயது பெண், 47 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 79 வயது மூதாட்டி ஆகிய 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 733 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்