மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Update: 2021-05-04 22:41 GMT
மேட்டூர்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. அதாவது கடந்த 2-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 1,567 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,127 கன அடியாக குறைந்தது. இது நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 838 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. இதனிடையே அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால், நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 98 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.98 அடியாக குறைந்தது.

மேலும் செய்திகள்