வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கொரோனா விதிமீறல் காரணமாக வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-05 19:40 GMT
காரைக்குடி,

காரைக்குடி நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின்படி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலாக உள்ள வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி சில ஜவுளி நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், ஷாப்பிங் மால்கள் செயல்படுவதாக புகார் எழுந்தன. அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன், சுந்தர் மற்றும் சுகாதார பணியாளர்கள் போலீசார் உதவியோடு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 அப்போது வர்த்தக நிறுவனங்கள் பிரதான வாயிலை தவிர்த்து மறைமுகமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.அவ்வாறு விதி மீறல் செய்து செயல்பட்டு வந்த 10 நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்