இருதரப்பினர் மோதல்; 7 பேர் கைது

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-05 20:17 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், சேர்மன். இவர்களுக்கு இடையே அங்குள்ள கோவிலில் கொடை விழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. தொடர்ந்து இரு தரப்பினரும் வெவ்வேறு மாதங்களில் கோவிலில் கொடை விழா நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக இருதரப்பினரும் சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கினர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 25 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜேந்திரன், அவருடைய மகன் கனகராஜ் (32), முருகன் (47), மாரி (22), பத்திரகாளி (30), பரமசிவன் (36), மற்றொரு முருகன் (47) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்