திறந்து இருந்த கடைகளுக்கு அபராதம்

கட்டுப்பாடுகளை மீறி திறந்து இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-06 16:52 GMT
பொள்ளாச்சி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக பகல் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன. 

இதை மீறி சில கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. சிலர் ஷட்டரை மூடிக் கொண்டு வியாபாரம் செய்தனர்.  இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் நகர்நல அதிகாரி ராம்குமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில், சிவக்குமார், ஜெயபாரதி மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். 

அப்போது கட்டுப்பாடுகளை மீறி திறந்து இருந்த கடைகளுக்கும், டீக்கடை, உணவகங்களில் பார்சல் வழங்காமல் அமர்ந்து சாப்பிட அனுமதித்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. 

அதன்படி கட்டுப்பாடுகளை மீறிய கடைக்காரர்களிடம் இருந்து ரூ.3600 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்