அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர், கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.

Update: 2021-05-08 01:16 GMT
திருவள்ளூர், 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி தினந்தோறும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

இந்தநிலையில் திருவள்ளூர் போக்குவரத்து அலுவலர் மற்றும் கணக்காளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடல்

அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அலுவலகத்தை தூய்மைப்படுத்தினர்.

மேலும் செய்திகள்