ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 10 ஆயிரத்து 19 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 505 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 368 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.