மது விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

முழு ஊரடங்கின்போது மது விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-09 16:22 GMT
ராமநாதபுரம், 
முழு ஊரடங்கின்போது மது விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து தீவிர மதுவிலக்கு சோதனை நடைபெற்றது. மேற்கண்ட சோதனையில் ராமநாதபுரம் உட்கோட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்து 330 மதுபாட்டில்களும், பரமக்குடி உட்கோட்டத்தில் 16 வழக்குகளும் 465 மதுபாட்டில்களும், கமுதி உட்கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்து 182 மதுபாட்டில்களும், ராமமேசுவரம் உட்கோட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்து 792 மதுபாட்டில்களும், கீழக்கரை உட்கோட்டத்தில் 2 வழக்குகள் பதிவு செய்து 55 மது பாட்டில்களும், திருவாடானை உட்கோட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்து 385 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
 முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் 11 வழக்குகள் பதிவு செய்து 555 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் குற்றவாளிகளுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடரும். 
எச்சரிக்கை
மேலும், கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்