அத்தியாவசிய தேவைக்கு வெளியே வருபவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

அத்தியாவசிய தேவைக்கு வெளியே வருபவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Update: 2021-05-09 18:17 GMT
திருவண்ணாமலை

முழு ஊரடங்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொேரானாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கட்டுக்குள் அடங்காததால் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

இந்த சமயத்தில் அரசால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், பகல் 12 மணி வரை மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். மற்ற கடைகள் அடைக்கப்படும். 

பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடும். ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் சுற்றக்கூடாது என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு
 உள்ளது. 

ஆதார் அட்டை கட்டாயம்

கடந்த முறை ஊரடங்கின் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றபட்டதோ அதே நடைமுறைகள் இம்முறையும் பின்பற்றபடும் என்று ேபாலீசார் தெரிவித்தனர். 
மேலும் மருத்துவமனைக்கு செல்வது, கொரோனா தடுப்பூசி போட செல்வது போன்ற அத்தியாவசிய தேவைக்கு மோட்டார் சைக்கிள், கார் ேபான்ற வாகனங்களில் வெளியே வருபவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும். 

தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்குகள், வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்