ஒரே நாளில் 892 பேருக்கு கொரோனா; 10 பேர் பலி

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்தது.

Update: 2021-05-09 19:23 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்தது.
மீண்டும் புதிய உச்சம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு 500, 600 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 900-ஐ நெருங்குகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பில் குமரி மாவட்டம் மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டது. அதாவது ஒரேநாளில் 819 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை தாண்டும் வகையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 18 பேர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 874 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 874 பேரில் 470 பேர் ஆண்கள், 404 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 56 சிறுவர்களும் அடங்குவர். இந்த 892 பேருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது.
10 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து           கொண்டிருக்கி றது. கடந்த சில நாட்களாக இறப்பு எண்ணிக்கை 10-க்கும் மேலாக இருந்து வருகிறது. நேற்று முன்தினமும் 10 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்