நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-10 19:35 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கோல்டன் ஜூப்ளி தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் நேற்று இரவு திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்