பெருந்துறையில், கடந்த 2 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் கூடாரம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

பெருந்துறையில், கடந்த 2 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Update: 2021-05-10 20:26 GMT
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பெருந்துறை பகுதியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜன், மகேந்திரன், மோகன்ராஜ், இளமாறன் ஆகியோர் பெருந்துறையில் பழைய பஸ் நிலைய ரவுண்டானா, நால்ரோடு சந்திப்பு, போலீஸ் நிலையம் சந்திப்பு, பவானி ரோடு அண்ணா சிலை சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது முக கவசம் அணியாமல் வந்த 100 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதமாக போலீசார் வசூலித்தனர். 
மேலும் வாகன போக்குவரத்து  அதிகம் உள்ள பெருந்துறை பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் சட்டம்- ஒழுங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், 2 போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் அந்த பகுதியில் தற்காலிகமாக சாமியான கூடாரம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு வழி போக்குவரத்து நடக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை ரோட்டில் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்