வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார்

வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார்

Update: 2021-05-13 17:50 GMT
ராமேசுவரம்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக  வருகிற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மதியம் 12 மணி வரை மளிகை, காய்கறி, பழக்கடை, மீன், இறைச்சி கடைகள் திறந்திருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் பகுதியில் மதியம் 12 மணிக்கு பிறகு கடைகள் வழக்கம்போல் மூடப்பட்டன. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரத்தில் மதியம் 12 மணிக்கு பிறகு ராமேசுவரம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்த அனைத்து வாகனங்களையும் நகர் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போலீசார், மதியம் 12 மணிக்கு பிறகு தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் அனைவரும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் தான் கொரோனா பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும் என்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்